போலி வாக்காளர்களை நீக்கும் வரை இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடக்கூடாது - சஞ்சய் நிருபம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மராட்டிய மாநிலத்தில் வரும் 31-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி வாக்காளர்களை நீக்கும் வரை இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடக்கூடாது - சஞ்சய் நிருபம்
Published on

மும்பை,

மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் நேற்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஷ்வானி குமாரை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்பு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த ஆண்டு வெளியான வாக்காளர் குறித்த வரைவு அறிக்கையில் மும்பையில் பல்வேறு போலி வாக்காளர்கள் இருப்பதை கண்டறிந்தோம்.

இதுகுறித்து நாங்கள் நடத்திய ஆய்வில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் சராசரியாக 20 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் கிட்டத்தட்ட 1.25 லட்சத்தில் இருந்து 5 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

வரும் 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் போலி வாக்காளர்களின் பெயரை நீக்குவது கடினம் என்பதால், இந்த தேதியை ஒத்திவைக்குமாறு நான் மாநில தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com