

ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் மெயின் பஜாரை சேர்ந்தவர் பீட்டர் சவரிராஜ் (வயது 56). இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 15-ந் தேதி இரவு ஓட்டப்பிடாரத்தில் இருந்து குறுக்குச்சாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். ராமச்சந்திராபுரம் அருகே சென்ற போது, குறுக்குச்சாலையில் இருந்து மேலமீனாட்சிபுரத்தை சேர்ந்த மகராஜன் (35) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டன. இதில் பீட்டர் சவரிராஜ், மகராஜன் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக பீட்டர் சவரிராஜ் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பீட்டர் சவரிராஜின் மகன் ஜான்சன், தனது தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தார். அதன்பேரில் சென்னையில் இருந்து மதுரைக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் டாக்டர்கள் வந்தனர். அவர்கள் பீட்டர் சவரிராஜின் உறுப்புகளை அகற்றி எடுத்து சென்றனர்.