பல்லாரி மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் பணி நேரத்தில் பெண் ஊழியருடன் நெருக்கமாக இருந்த அதிகாரி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

பல்லாரி மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் பணி நேரத்தில் பெண் ஊழியருடன் அதிகாரி நெருக்கமாக இருந்த, வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
பல்லாரி மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் பணி நேரத்தில் பெண் ஊழியருடன் நெருக்கமாக இருந்த அதிகாரி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
Published on

பல்லாரி,

பல்லாரி டவுன் கோட்டை பகுதியில் உள்ள நாராயணப்பா காம்பவுண்ட் பகுதியில், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சம்பத்குமார் என்பவர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் பெண் ஒருவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சம்பத்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலேயே வேலை நேரத்தில் சிரித்து பேசி கொண்டு இருந்ததாகவும், 2 பேரும் காதல் மழை பொழிந்து வந்ததாகவும் தெரிகிறது. மேலும் சில சமயங்களில் அவர்கள் அலுவலகத்தில் வைத்து எல்லை மீறி உள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் அதிகாரிகளிடம் புகாரும் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் சம்பத்குமார், தனது காதலியுடன் பணி நேரத்தில் அலுவலகத்தின் ஒரு பகுதியில் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது.

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவை பார்த்த பலரும் பணி நேரத்தில் பெண் ஊழியருடன் நெருக்கமாக இருந்த சம்பத்குமாரையும், அவரது காதலியான பெண் ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com