திருவள்ளூர் அருகே எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

திருவள்ளூர் அருகே எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் அருகே எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
Published on

திருவள்ளூர்,

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்றார். திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் சந்திப்பு பகுதியில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான பி.வி.ரமணா பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும், உற்சாக வரவேற்பு அளித்தார்.

அதேபோல மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன், திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் எஸ்.ஏ.நேசன், வக்கீல் வேல்முருகன், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் மணவாளநகர் ஞானகுமார், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி.இ.சந்திரசேகர், இன்பநாதன், கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், போளிவாக்கம் மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். அதை தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி நோக்கி சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com