ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Published on

ஈரோடு,

மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் சுயதொழில் புரிவோர் கடனை அலைக்கழிக்கவிடாமல் உடனடியாக வழங்க வேண்டும். ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட மொத்தம் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ஆர்.ராஜரத்தினம் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், துணைச்செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவழும் மாற்றுத்திறனாளர் அமைப்பு மாநில தலைவர் புஷ்பராஜ், சேலம் மாவட்ட ஞான ஒளி அமைப்பின் தலைவர் பெருமாள், நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்க தலைவர் அன்பு செழியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com