தஞ்சையில் முன்னாள் படைவீரர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான கேண்டீன் முன்பு முன்னாள் படைவீரர் சங்கத்தினர் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சையில் முன்னாள் படைவீரர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான கேண்டீன் முன்பு முன்னாள் படைவீரர் சங்கத்தினர் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தஞ்சை மாவட்ட தலைவர் சி.டி.அரசு தலைமை தாங்கினார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக லாபகரமாக இயங்கி வரும் முன்னாள் படைவீரர்களுக்கான கேண்டீனை, மத்தியஅரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியை காரணம் காட்டி, லாபம் ஈட்டவில்லை என்ற பொய்யான காரணத்தை கூறி கேண்டீனை மூட முயற்சி செய்வதை கைவிட வலியுறுத்தியும், கேண்டீன் சிறப்பாக செயல்பட உரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், மன்னார்குடி வட்ட தலைவர் விஜயராகவன் மற்றும் முன்னாள் படைவீரர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com