தஞ்சையில் 12 நாட்களாக நடந்த முன்னாள் படைவீரர்களின் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

தஞ்சையில் 12 நாட்களாக நடந்த முன்னாள் படைவீரர்களின் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தஞ்சையில் 12 நாட்களாக நடந்த முன்னாள் படைவீரர்களின் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உழவர் சந்தை அருகே முன்னாள் படைவீரர்களுக்கான கேண்டீன் உள்ளது. இந்த கேண்டீனை மூடுவதற்கு மறைமுக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை கண்டித்தும், கேண்டீனை உடனடியாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் முன்னாள் படைவீரர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி முன்னாள் படைவீரர்கள் சங்கம் மற்றும் போராட்டக்குழுவினர் தலைவர் கர்னல் அரசு தலைமையில் கேண்டீன் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த 13ந் தேதி தொடங்கியது.


இந்த நிலையில் கேண்டீன் வருகிற 29ந்தேதி முதல் திறக்கப்படும் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் படைவீரர்கள் போராட்டத்தை ஒத்தி வைத்தனர். நேற்று 12வது நாளாக அவர்கள் கேண்டீன் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து சங்க தலைவர் கர்னல் அரசு கூறுகையில், தஞ்சையில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான கேண்டீன் மூலம் 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பயன்பெற்று வந்தனர். இந்த நிலையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்து கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தினோம். இதையடுத்து வருகிற 29ந்தேதி முதல் கேண்டீன் திறக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 29ந்தேதி திறந்தால் இந்த மாதத்துக்கான பொருட்களை 3 ஆயிரத்து 800 உறுப்பினர்களுக்கும் 3 நாட்களில் வழங்க முடியாது. எனவே தாமதம் இன்றி உடனே திறக்க வேண்டும்என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com