பேஸ்புக் காதல்

நைஜீரியாவில் வசிக்கும் சோபி இஜியோமா, ஒப்பனைக் கலைஞர். பேஸ்புக்கில் வந்த திருமண விளம்பரத்தைப் பார்த்தவர் அது பற்றி தோழிகளுடன் சேர்ந்து கிண்டல் செய்தார்.
பேஸ்புக் காதல்
Published on

ஜாலிக்காக எனக்கு உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருக்கிறது என்று ஒரு கமெண்டையும் தட்டி விட்டிருக்கிறார். அடுத்த ஏழே நாட்களில் விளம்பரம் செய்த அந்த நபரையே திருமணம் செய்துகொண்டார்!

மாப்பிள்ளை பையன், சிடிம்மா அமெடு அறைகலன்கள் உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். திருமணம் செய்துகொள்ள அவர் முடிவெடுத்தபோது, நண்பர்கள் பேஸ்புக்கில் விளம்பரம் செய்து, பெண் தேடச் சொன்னார்கள். மாப்பிள்ளை பையனும், பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை தட்டிவிட, ஒருசிலரே ஆர்வம் காட்டினர். என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் சோபியின் கருத்து வந்துசேர்ந்தது. உடனே தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்சர் மூலம் உரையாட ஆரம்பித்தார்.

சில மணி நேரங்களில் இருவரும் நண்பர்களைப் போல உரையாட ஆரம்பித்துவிட்டோம். இரண்டாவது நாள், 500 கி.மீ. தூரத்திலிருந்து என்னைப் பார்க்க வந்துவிட்டார். உணவகத்தில் முதல் சந்திப்பு. ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் இருவருக்கும் மிகவும் பிடித்துபோய்விட்டது. யாரோ ஒரு மனிதரைப் பார்த்தவுடன் பிடித்துப் போகும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. அவரும் என்னை மனதளவில் மனைவியாகவே ஏற்றுக்கொண்டது போல் பேசினார். பிறகு அவருடைய உறவினர் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றார். இருவரும் சென்றோம். அங்கே உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. அவர்களை அழைத்துக்கொண்டு அன்றே எங்கள் வீட்டுக்கு வந்து, பெண் கேட்டார். என் அண்ணனுக்கு அமெடுவைப் பிடித்துவிட்டது. அப்பா இல்லாத எனக்கு, ஒரு நல்ல மனிதர் கணவராகக் கிடைத்துவிட்டார் என்று மகிழ்ந்தார். உடனே அக்கம் பக்கத்தினரை அழைத்து, நிச்சயதார்த்தம் நடத்தி, திருமணத்தையும் முடித்துவிட்டோம். சேர்ந்து வாழ ஆரம்பித்த சில நாட்களில் அமெடு எவ்வளவு அருமையான மனிதர் என்பதைப் புரிந்து கொண்டேன் என்கிறார் சோபி.

# ஆஹா இதுவல்லவா காதல்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com