உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
Published on

உத்திரமேரூர் அடுத்த மேல் துளி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 62). இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் தனது வயலில் சென்று தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்குவதற்கு சுவிட்ச் போட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் மணிகண்டன் உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நாதமுனி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com