மன்னார்குடி அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் - 30 பேர் கைது

மன்னார்குடி அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் - 30 பேர் கைது
Published on

சுந்தரக்கோட்டை,

மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், பரவாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக கூறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்தனர். முன்னதாக உண்ணாவிரதம் இருந்தவர்களை அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் வி.திவாகரன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை. கணக்கெடுப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. நிவாரண தொகையை வங்கியில் செலுத்தி விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் நிவாரணம் வந்தடையவில்லை. இது தொடர்பாக விரைவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அண்ணா திராவிடர் கழகம் சார்பில் சந்திக்க உள்ளேன். பிரதமர் மோடி கஜா புயல் நிவாரண நிதி வழங்காமல் உள்ளார். அதேசமயம் பாகிஸ்தான், இந்தோனேசியா, நேபாளம் போன்ற நாடுகளில் பேரிடர் ஏற்பட்டபோது பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார். ஏன் தமிழகத்திற்கு கொடுக்கவில்லை என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com