டெல்லி இளம் பெண் பலாத்காரம் செய்து படுகொலை சம்பவத்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி இளம் பெண் பலாத்காரம் செய்து படுகொலை சம்பவத்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.
டெல்லி இளம் பெண் பலாத்காரம் செய்து படுகொலை சம்பவத்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

திருவள்ளூர்,

டெல்லியில் காவல்துறையில் பணிபுரிந்த 21 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் அண்ணா சிலை அருகே நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆவடி நாகராஜன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் நகர தலைவர் விக்னேஷ், நகர அமைப்பாளர் பெரியார் பிரியன், சரவணன், சம்பத், பூபேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திரளான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பலர் கலந்துகொண்டு டெல்லியில் நடந்த கொடூர கொலை சம்பவத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com