அந்தியூர், பவானி பகுதியில் 4 இடங்களில் தீ விபத்து

அந்தியூர், பவானி பகுதியில் 4 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
அந்தியூர், பவானி பகுதியில் 4 இடங்களில் தீ விபத்து
Published on

ஈரோடு,

அந்தியூர் அருகே உள்ள வெடிக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 58). விவசாயி. இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்ட சோளத்தட்டைகளை வீட்டின் அருகே வைத்து உள்ளார்.

இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் பழனிச்சாமி மாடுகளை ஓட்டி வருவதற்காக வனப்பகுதிக்கு சென்று விட்டார். அப்போது அவரின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் காற்றின் வேகத்தால் சோளத்தட்டுப் போரிலும் தீப்பரவியது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் குடிசையிலும் சோளத்தட்டு போரிலும் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து நிலைய அதிகாரி சுந்தரவடிவேல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து குடிசை வீட்டிலும், சோளத்தட்டை போரிலும் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் சோளத்தட்டு போர் மற்றும் குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து நாசம் ஆனது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதேபோல் அந்தியூர் பகுதியில் மற்றொரு இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அந்தியூர் அருகே உள்ள கொல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (52). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை 7 மணி அளிவில் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கருப்புசாமி வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. பின்னர் மளமளவென தீப்பிடித்தது.

இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் கூறினார்கள். இந்த 2 தீவிபத்துகள் குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்தியூர் அருகே உள்ள கொல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கவுரி (31). இவர் நேற்று மதியம் வீட்டில் கியாஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது கியாஸ் சிலிண்டரில் உள்ள குழாயில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. திடீரென தீப்பிடித்தது. மேலும் கியாஸ் அடுப்பிலும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கவுரி பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடி உயிர்தப்பினார். மேலும் அவர் இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கியாஸ் அடுப்பில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும், கியாஸ் சிலிண்டரும் அப்புறப்படுத்தப்பட்டது.

பவானி அருகே உள்ள சீதபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (55). இவர் நேற்று காலை குடும்பத்துடன் வெளியூர் சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தார். அப்போது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் குடிசை முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. வீட்டில் இருந்த பத்திரங்கள், ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் எரிந்து நாசம் ஆனது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com