

நாகர்கோவில்,
குமரி மாவட்ட இந்து மக்கள் கட்சி இளைஞரணி மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில், அமைப்பாளர் நடராஜபிள்ளை, மாநில தொழிற்சங்க பிரிவு தலைவர் திருப்பதி, மாவட்ட தலைவர் சுபாமுத்து உள்ளிட்டோர் நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில், திருக்கோவில்கள் மற்றும் திருமடங்கள் ஆகியவற்றின் நிர்வாகத்தை அறநிலைய துறையிடம் இருந்து விடுவித்து ஆன்றோர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட அரசை வலியுறுத்த வேண்டும், அனைத்து கோவில்களிலும் பிரகாரங்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.