

எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கீழ வைப்பார் கிராமத்தை சேர்ந்த ஜெபமாலை என்பவரின் மகன் செல்டன் (வயது 55). மீனவர். இவர் சொந்தமாக பைபர் படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்டன் மது போதையில் தனது மனைவியிடம் மீன்பிடிக்க செல்ல மாட்டேன் என்று கூறி தகராறு செய்துள்ளார். பின்னர் நள்ளிரவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லையாம். இந் நிலையில் நேற்று காலையில் ஊருக்கு அருகேயுள்ள வேலி காட்டிலுள்ள ஒரு மரத்தில் செல்டன் தூக்கிட்டு பிணமாக தொங்கியுள்ளார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளத்தூர் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று செல்டனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
-