7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - 42,320 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு

மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கண்ணன் வெளியிட்டார். இந்த பட்டியலின்படி 42,320 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - 42,320 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு
Published on

விருதுநகர்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதிய வாக்காளர் திருத்த பட்டியல் தயாரிக்க விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமின்போது வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்ப்பது, பெயர் நீக்கம் செய்வது மற்றும் திருத்தம் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று காலை வெளியிடப்பட்டது. கலெக்டர் கண்ணன் வாக்காளர் பட்டியலின் பிரதிகளை அரசியல் கட்சியினரிடம் வழங்கினார்.

புதிய வாக்காளர் பட்டியலில் சிறப்பு முகாம்கள் மூலம் 42 ஆயிரத்து320 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். 2,222 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. 3,300 வாக்காளர்களின் பெயர்களில் அவர்களது கோரிக்கையின்படி திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக் காளர்கள் 7 லட்சத்து 95 ஆயிரத்து 507 பேரும் பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 34 ஆயிரத்து 609 பேரும் இதரர் 180 பேரும் என மொத்தம் 16 லட்சத்து 30 ஆயிரத்து 296 வாக்காளர்கள் உள்ளனர்.

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி 1,14,504 ஆண் வாக்காளர்கள்,1,20,040 பெண் வாக்காளர்கள், இதரர் 27 பேர் மொத்தம் 2,34,571 வாக்காளர்கள் உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,19,092, 1,24,988 பெண் வாக்காளர்கள், இதரர் 32 பேர் என மொத்தம் 2,44,112 வாக்காளர்கள் உள்ளனர்.

சாத்தூர் தொகுதியில் 1,18,581 ஆண் வாக்காளர்கள், 1,25,283 பெண் வாக்காளர்கள், இதரர் 26 பேர் என மொத்தம் 2,43,890 வாக்காளர்கள் உள்ளனர்.

சிவகாசி தொகுதியில் 1,23,679 ஆண் வாக்காளர்கள், 1,30,258 பெண் வாக்காளர்கள், இதரர் 27 பேரும் என மொத்தம் 2,53,964 வாக்காளர்கள் உள்ளனர்.

விருதுநகர் தொகுதியில் 1,06,789 ஆண் வாக்காளர்கள், 1,11,202 பெண் வாக்காளர்கள், இதரர் 42 பேர் என மொத்தம் 2,18,033 வாக்காளர்கள் உள்ளனர்.

அருப்புக்கோட்டை தொகுதியில் 1,06,607 ஆண்வாக்காளர்களும், 1,12,828 பெண்வாக்காளர்களும், இதரர் 16 பேர் என மொத்தம் 2,19,451 வாக்காளர்கள் உள்ளனர்.

திருச்சுழி தொகுதியில் 1,06,255 ஆண் வாக்காளர்கள், 1,10,010 பெண் வாக்காளர்கள், இதரர் 10 பேர் என 2,16,275 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் அதிக பட்சமாக சிவகாசியில் 2,53,964 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக திருச்சுழி தொகுதியில் 2,16,275 வாக்காளர்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com