மாற்றுத்திறனாளிகளுக்கான `லிப்ட்'டை பயன்படுத்திய 4 வாலிபர்களுக்கு நூதன தண்டனை ரெயில்வே கோர்ட்டு அதிரடி

விரார் ரெயில்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான லிப்ட்டை பயன்படுத்திய 4 வாலிபர்களுக்கு ரெயில்வே கோர்ட்டு நூதன தண்டனை வழங்கி உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான `லிப்ட்'டை பயன்படுத்திய 4 வாலிபர்களுக்கு நூதன தண்டனை ரெயில்வே கோர்ட்டு அதிரடி
Published on

வசாய்,

ரெயில்நிலையங்களில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக லிப்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதை பல நேரங்களில் சாதாரண மக்கள் ஆக்கிரமித்து கொள்கின்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் லிப்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று விரார் ரெயில்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான லிப்ட்டை 4 வாலிபர்கள் பயன்படுத்தி உள்ளனர். அப்போது, அவர்கள் அந்த வழியாக சென்ற ரெயில்வே மாஜிஸ்திரேட் ஆர்.என்.சவானின் கண்ணில் பட்டுவிட்டனர். இதையடுத்து மாஜிஸ்திரேட்டு உடனடியாக அந்த வாலிபர்களை பிடித்து வருமாறு அங்கு இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் மாற்றுத்திறனாளிகளுக்கான லிப்ட்டை பயன்படுத்திய குற்றத்திற்காக மிதேஷ் (வயது25), விதான் அசோக் (20), சச்சின் (18), சந்தோஷ் (25) ஆகிய 4 வாலிபர்களை பிடித்து ரெயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

ரெயில்வே கோர்ட்டு 4 வாலிபர்களையும், 2 நாட்களுக்கு விரார் ரெயில்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கான லிப்ட்டை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது என விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுமாறு நூதன தண்டனையை வழங்கியது.

இந்த தண்டனையை ஏற்று 4 வாலிபர்களும் 2 நாட்கள் விரார் ரெயில்நிலையத்தில் லிப்டு அருகே நின்று கையில் பதாகைகளுடன் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com