‘பெண்களுக்கு செயல்முறை அறிவு இல்லை என ஆண்கள் நினைக்கிறார்கள்’ ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு

‘பெண்களுக்கு செயல்முறை அறிவு இல்லை என ஆண்கள் நினைக்கி றார்கள்’ என்று ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றம்சாட்டினார்.
‘பெண்களுக்கு செயல்முறை அறிவு இல்லை என ஆண்கள் நினைக்கிறார்கள்’ ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு
Published on

பெங்களூரு,

பெங்களூரு ஐ.ஐ.எம்.பி. கல்லூரியில் பெண் தலைமை-2019 என்ற பெயரில் 5-வது மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கர்நாடக ஊர்க்காவல் படை பிரிவு ஐ.ஜி. ரூபா கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-

நகர ஆயுதப்படை போலீஸ் பிரிவில் துணை கமிஷனராக பணியாற்றியபோது 85 அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பாக இருந்த அங்கீகரிக்கப்படாத 255 பாது காவலர்களை நீக்கினேன். பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகளை கூறியபோது என்னுடன் பணியாற்றியவர்கள் அமைதியாகி பார்வையாளர்களாக மாறி போனார்கள். அவர்கள் எனக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கவில்லை. அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய காத்திருக்கிறேன்.

ஒரு நடைமுறைக்கு எதிராக பேசும்போது நிறையபேர் அதை விரும்பமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தேவையான அனைத்தும் அங்கு கிடைக்கிறது. இந்த விஷயத்தில் நான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன்.

நான் விதிமுறைகளை பின்பற்றி நல்ல முடிவுகளை எடுப்பேன். இருப்பினும் நான் பணிக்கு சேர்ந்த பிறகு எனது உத்தரவுகளை செயல்படுத்த அதிகாரிகள் தயக்கம் காட்டுவார்கள்.

பெண் அதிகாரி என்பதாலும், பெண்களுக்கு சயல்முறை அறிவு இல்லை என்று ஆண்கள் நினைப்பதாலும் தான் இது நடக்கிறது. ஆனால் பெண்கள், 2 பேர் செய்யக் கூடிய பணிகளை சிறப்பாக செய்து அனைத்து அறிவுகளும் பெற்றவர்களாக தங்களை நிரூபித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com