கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி அறிவிக்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் 27-ந் தேதி போராட்டம்

கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி அறிவிக்கக்கோரி பால் உற்பத்தியாளர்கள் வருகிற 27-ந் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெரம்பலூரில் தெரிவித்தார்.
கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி அறிவிக்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் 27-ந் தேதி போராட்டம்
Published on

பெரம்பலூர்,

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு லிட்டர் பசும்பால் ரூ.40 எனவும், எருமை பால் ரூ.50 எனவும் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க கோரியும், மேலும் பால் உற்பத்தியாளர்களின் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தும் கடந்த 4 வருடங்களாக போராடி வருகிறோம். மேலும் வருகிற 27-ந் தேதி அனைத்து மாவட்டத்திலும் பால் உற்பத்தியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தோம். இந்நிலையில் தமிழக அரசு நேற்று அதாவது (நேற்று முன்தினம்) பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி ரூ.32 எனவும், எருமைப் பாலுக்கு ரூ.6 உயர்த்தி ரூ.41 எனவும் கொள்முதல் விலையை அறிவித்திருக்கிறது.

கடந்த 2014-க்கு பின் கால்நடை தீவனங்களின் விலை 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. ஆவின் கால்நடை தீவனம் 50 கிலோ மூட்டை ரூ.720-ல் இருந்து ரூ.1,200-க்கு மேல் உயர்ந்துள்ளது. இதர எந்த கோரிக்கைகள் குறித்தும் அரசு அறிவிக்கவில்லை. எனவே தமிழக அரசின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்வு அறிவிப்பு பால் உற்பத்தி யாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக் கிறது.

27-ந்தேதி போராட்டம்

எனவே வருகிற 23-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் எங்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளின் கூட்டத்தில் சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், தமிழக அரசு அறிவித்துள்ள பாலுக்கான கொள்முதல் விலை உயர்வுவை கண்டித்தும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை வலியுத்தியும் வருகிற 27-ந் தேதி எந்த மாதிரியான போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்பது முடிவு செய்யப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சங்கத்தின் மாநில செயலாளர் செல்லத்துரை, பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com