

பாலகுமார், தாமஸ், பிரகாஷ், மணி, நித்யா, வித்யா ஆகிய தன்னார்வலர்கள், சிறுவர்-சிறுமிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி கொடுத்து வருகின்றனர்.
இந்த அமைப்பின் ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் எஸ்.வி.சேகர், எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ், சந்துரு ஆகியோர் கலந்துகொண்டு சிலம்பம் போட்டியில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் சிலம்பம் பயின்று வரும் மாணவ-மாணவிகளையும், அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் தன்னார்வலர்களையும் எஸ்.வி.சேகர் வெகுவாக பாராட்டினார்.