கவர்னர் கிரண்பெடி ஆய்வு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர உத்தரவு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு நடத்தினார். அப்போது அவர், மாணவ- மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கவர்னர் கிரண்பெடி ஆய்வு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர உத்தரவு
Published on

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி அவ்வப்போது கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்து மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் நேற்று பிற்பகல் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால்நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வில் ஈடுபட்டார்.

அதன்பின் அரசு மகளிர் பாலிடெக்னிக்கிற்கு சென்றார். இந்த ஆய்வின்போது மாணவர்களின் குடும்ப சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பாலிடெக்னிக் நிர்வாகம் மாணவ, மாணவிகளுக்கு சூழ்நிலைகள் குறித்து விளக்க கேட்டுக்கொண்டார். மேலும் தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை மாணவர்களுக்கு ஏற்படுத்திதர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கல்வித்துறை செயலாளர் அன்பரசு, உயர்கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, சிறப்பு பணி அதிகாரி ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com