எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை விலை குறைவால் விவசாயிகள் கவலை

கூடலூர் பகுதியில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை விலை குறைவால் விவசாயிகள் கவலை
Published on

கூடலூர்,

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான உத்தமபாளையம் தாலுகாவில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், தேனி தாலுகாவில் 2 ஆயிரத்து 412 ஏக்கர், போடி தாலுகாவில் 488 ஏக்கர் என 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. கூடலூர் தாமரைக்குளம், வெட்டுக்காடு, பாரவந்தான், ஒழுகுவழி, பகுதிகளில் முதல் போகம் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது அறுவடைக்கு இப்பகுதிகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் தற்போது விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை வீடுகளில் சேகரித்துவைக்க முடியாத நிலையில், வியாபாரிகள் கேட்கும் குறைந்த விலைக்கே விற்பனை செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகிறார்கள்.

தற்போது 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல் ரூ.920 முதல் ரூ.930 வரை விலை போகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 36 மூடைகள் கிடைக்க வேண்டிய இடத்தில் 25 முதல் 30 மூட்டை நெல் மட்டுமே கிடைத்துள்ளது. விலையும் போதுமானதாக இல்லை. எனவே விவசாயிகள் நலன் கருதி அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com