

வில்லியனூர்,
வில்லியனூரை அடுத்த மங்கலத்தில் காவல்துறை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமை தாங்கினார். போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி போலீசார், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் தற்கொலை தடுப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன், பெரியசாமி, வேலய்யன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.