இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதை தடை செய்ய வேண்டும்

இந்து மத நம் பிக்கைகளை இழிவு படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று அரியலூர்- பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.
இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதை தடை செய்ய வேண்டும்
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்ட இந்து முன்னணியினர், அந்த அமைப்பின் மாநில செயற் குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அப் போது அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயினுலாபதீனிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடியூப் சேனலில் சிலர் தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகவும், மிகவும் கீழ்தரமாகவும் விமர்சித்து பதிவிட்டுள்ளார் கள். எனவே சிலரால் யூடியூப் சேனலில் பதிவிடப் பட்டுள்ள வீடியோக்கள் சமூக பதட் டத்தை ஏற்படுத்தும் விதமாக வும், சாதி, மதத்தை பற்றி, இந்துக்கள்மனம் புண்படும் படியும் உள்ளதால், அந்த யூடியூப் சேனல் பதிவை செய்ய வேண்டும். அதை பதி விட்ட நபர்கள் மீது சட்டப் படி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதே போல் பெரம்பலூர் மாவட்ட இந்து முன்னணியின் தலைவர் நடராஜன் தலைமை யில், அந்த அமைப்பினர் இந்து மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்தும் சிலரின் யூடியூப் சேனல் பதிவுகளை தடை செய்யவும், அந்த நிகழ்ச் சிகளை தயாரித் தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) கிறிஸ்டியிடம் மனு கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com