

மும்பை,
சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த் கூறியதாவது:-
மந்திராலயாவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் அங்கு வரும் பொதுமக்களுக்கும் சில நேரங்கள் திடீரென உடல்நல குறைவு காரணமாக அவசர மருத்துவ சிகிச்சை கொடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே அரசு மந்திராலயா வளாகத்தில் மருத்துவமனைக்கு இடம் ஒதுக்க முடிவு செய்துள்ளது.
முதலுதவி சிகிச்சை ஒருவரை காப்பாற்ற தேவையான பொன்னான நேரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். இங்கு ரத்த அழுத்தம், நெஞ்சுவலி, நீரிழிவு போன்ற நோய்களுக்கு மருத்துகள் வைக்கப்படும்.
இவ்வாறு மந்திரி தீபக் சவாந்த் கூறினார்.