சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 15 மின்மோட்டார்கள் பறிமுதல்

தரங்கம்பாடி பகுதியில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன் படுத்திய 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 15 மின்மோட்டார்கள் பறிமுதல்
Published on

பொறையாறு,

தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதாக நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார், கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, உதவி செயற்பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, முரளி ஆகியோர் கொண்ட குழுவினர் தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் வீடுகள், வர்த்தக வளாகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அதில் பல்வேறு வீடுகளில் சட்டவிரோதமாக குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி பயன்படுத்துவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 15 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட இடங்களில் உள்ள குடிநீர் இணைப்புகளையும் துண்டித்தனர். தரங்கம்பாடி பகுதியில் சட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்சி பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும், ஆய்வின்போது பொதுமக்களிடம் தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டு கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com