ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு: அதிகாரிகளுக்கு, கலெக்டர் லதா அறிவுறுத்தல்

மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. இதில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளை கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு: அதிகாரிகளுக்கு, கலெக்டர் லதா அறிவுறுத்தல்
Published on

சிவகங்கை,

மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த ஜமாபந்தி சிங்கம்புணரி, திருப்புவனம், மானாமதுரை ஆகிய தாலுகாக்களில் வருகிற 15-ந்தேதி அன்றும், காளையார்கோவில், சிவகங்கை, இளையான்குடி, திருப்பத்தூர், காரைக்குடி மற்றும் தேவகோட்டை தாலுகாக்களில் 17-ந்தேதி அன்றும் நிறைவடைகிறது.

காளையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் லதா தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாட்டரசன்கோட்டை உள்வட்டத்திற்குட்பட்ட நாட்டரசன்கோட்டை, பிரண்டைக்குளம், முத்தூர், கொல்லங்குடி, உசிலனேந்தல், கவுரிப்பட்டி, பனங்காடி, வாணியங்குடி, மாங்காட்டேந்தல், சென்னலக்குடி, விட்டனேரி, காஞ்சிப்பட்டி, முடிக்கரை, புதுக்கிளுவச்சி, ஒய்யவந்தான், வெட்டிக்குளம், சோழவந்தான், அல்லூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுதாரர்கள் முன்னிலையில் மனுக்கள் மீது விசாரணை செய்து தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் லதா பேசும்போது, மாவட்டத்தில் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடிய மனுக்களுக்கு அன்றைய தினமே நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தீர்வு வழங்கிடும் வகையில் அனைத்துத்துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குனர்(நில அளவை) யோகராஜா, காளையார்கோவில் தாசில்தார் சந்தானலட்சுமி, அலுவலக மேலாளர் யாஸ்மின், துணை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com