ஆலந்தூரில் ஆட்டோ டிரைவர்கள், காய்கறிகள் விற்பனையாளர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை

ஆலந்தூரில் முன்னுரிமை அடிப்படையில் ஆட்டோ டிரைவர்கள், காய்கறிகள் விற்பனையாளர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்.
ஆலந்தூரில் ஆட்டோ டிரைவர்கள், காய்கறிகள் விற்பனையாளர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை
Published on

ஆலந்தூர்,

சென்னை ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள 12 வார்டுகளில் குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் விற்பனை மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்த வீழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கினார். சென்னை மாநகராட்சி தென் சென்னை துணை கமிஷனர் ராஜகோபால் சுக்ரா, ஆலந்தூர் மண்டல அலுவலர் சீனிவாசன், செயற்பொறியாளர்கள் முரளி, ராஜசேகர், வருவாய் அலுவலர்கள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறிகள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் அரசு அறிவிப்பின் பேரில், ஆட்டோ டிரைவர்கள், வீடு வீடாக சென்று பால், செய்தித்தாள் போடுபவர்கள், காய்கறி விற்பனையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடவும், முகாமிற்கு வர முடியாத முதியவர்களுக்கு நடமாடும் வாகனம் முலம் சென்று தடுப்பூசி போடவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com