சென்னையில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 1,278 பேருக்கு ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம்; மாநகராட்சி நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டல அமலாக்க குழுவினரால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 1,278 பேருக்கு ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் அபராதம்; மாநகராட்சி நடவடிக்கை
Published on

அந்த வகையில் கடந்த 16-ந் தேதி ஒருநாள் மட்டும் சென்னையில் முக கவசம் அணியாத 1,278 தனிநபர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 16-ந் தேதி நடைபெற்ற 7 பொது மற்றும் தனியார் நிகழ்ச்சியில் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காததால் ரூ.26 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் 6-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 48 ஆயிரத்து 33 தனிநபர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 81 லட்சத்து 63 ஆயிரத்து 590 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com