சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம் இறுதிக்கட்டமாக இன்று நடக்கிறது

சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம் இறுதிக்கட்டமாக இன்று நடக்கிறது
Published on

சென்னை,

சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளனவா? என்பதை பொதுமக்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்வதற்காகவும், இதர திருத்தங்கள் செய்து கொள்ளும் வகையிலும் ஏற்கனவே 3 கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் 4-வது மற்றும் இறுதி கட்டமாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களையும் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com