கும்மிடிப்பூண்டியில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கும்மிடிப்பூண்டியில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டியில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
Published on

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி முனுசாமி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக இந்த குடியிருப்புகளில் குறைந்த மின்அழுத்தம் ஏற்படுவதால் மின்சாதனங்கள், மோட்டார்கள் பழுதடைந்து வருகின்றன.எனவே புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் மின்மாற்றி அமைப்பதற்கான இடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் மின்மாற்றி அமைக்காமல் காலதாமதம் செய்து வருவதாக தெரிகிறது.

இந்தநிலையில் புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி முனுசாமி நகர் குடியிருப்போர் பொது நலச்சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் நேற்று கும்மிடிப்பூண்டி துணை மின்நிலையத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஊரக இளநிலை உதவி பொறியாளர் பத்மநாபன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது புதிதாக மின்மாற்றி அமைத்திட அனைத்து அனுமதியும் கிடைத்து விட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் காலதாமதம் ஆகி வருவதாகவும், விரைவில் மின்மாற்றி அமைக்கப்படும் என்றும் எழுதிக்கொடுத்தார். இதனையடுத்து ஒரு மணி நேர போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com