“கோவில்பட்டி தொகுதியில் என்றைக்கும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

“கோவில்பட்டி தொகுதியில் என்றைக்கும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும்“ என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
“கோவில்பட்டி தொகுதியில் என்றைக்கும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை தள்ளி வைக்கப்பட்டாலும், விரைவில் முதல்வர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும்போது கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். கொரோனா காலத்திலும், கொரோனா தடுப்பு பணிகளுடன், வளர்ச்சி பணிகளையும் தடையில்லாமல் அரசு மேற்கொண்டு வருகிறது.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு மக்கள் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோவில்பட்டி தொகுதியில் தி.மு.க. இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. இனிமேலும் இந்த தொகுதியில் தி.மு.க வெற்றி பெற போவதில்லை. என்றைக்கும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க வடக்கு மாவட்ட அவைத்தலைவர் என்.கே.பெருமாள், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், முன்னாள் எம்.எல்.ஏ.வும், அறங்காவலர் குழு தலைவருமான மோகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யா, நகர அ.தி.மு.க செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரைப்பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, வண்டாணம் கருப்பசாமி, போடுசாமி, பால்ராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கோவில்பட்டி யூனியன் துணை தலைவர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு அருகே தலையால்நடந்தான்குளம் கிராமத்தில் பாலமுருகன் (வயது 26) என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய மனைவி அபிராமியிடம், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் கூறி தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் காசிராஜன், மாவட்ட கவுன்சிலர் ப்ரியா குருராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆசூர் காளிப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com