மணப்பாடு பகுதியில் மணல் திட்டுகளை அகற்ற மீனவர்கள் கோரிக்கை

மணப்பாடு பகுதியில் மணல் திட்டுகளை அகற்ற வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மணப்பாடு பகுதியில் மணல் திட்டுகளை அகற்ற மீனவர்கள் கோரிக்கை
Published on

உடன்குடி,

உடன்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரை பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கடற்கரையாகும். இயற்கையாக அமைந்துள்ள உயரமான மணல் குன்று, கடல் வழி பயணிகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம், சவேரியார் வாழ்ந்த குகை, நாழிக்கிணறு, கடற்கரையில் சுவையான குடிநீர் கிணறுகள், ஆண்டு தோறும் கடல் விளையாட்டுகள் இப்படி இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்த ஒரு சுற்றுலா தலமாகும்.

இந்த கடற்கரையில் இயற்கையாக உருவாகும் மணல் திட்டுகளால் இங்குள்ள மீனவர்கள் அவதிப்படுகின்றனர். கடற்கரைக்கு படகுகளை கொண்டு வந்து மீன்களை இறக்கிடவும் பின்பு மீன்பிடிக்க கடலுக்கு செல்லவும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கடற்கரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீளமாக உருவாகும் மணல் திட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இவர்களின் சொந்த செலவில் பொக்லைன் உள்ளிட்ட ராட்சத எந்திரங்கள் மூலம் மணல் திட்டுகளை அடிக்கடி அப்புறப்படுத்துகின்றனர்.

இந்த மணல் திட்டுகள் நிரந்தரமாக உருவாகாமல் தடுப்பதற்கு ஒரே வழி தூண்டில் வளைவு அமைப்பதுதான். உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திட்டுக்களை உடனடியாக அகற்ற வேண்டும் என அங்குள்ள மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com