முத்தையாபுரத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

முத்தையாபுரத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
முத்தையாபுரத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை
Published on

ஸ்பிக்நகர்,

அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடம் அமைந்துள்ள அம்மன்புரத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்தது. இதனால் இந்த வருடம் மாவட்ட நிர்வாகம் வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்திற்கு மக்கள் செல்வதற்கும் அஞ்சலி செலுத்துவதற்கும் அனுமதி அளிக்கவில்லை. அதற்கு மாறாக அந்தந்த பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதனை முன்னிட்டு நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் நேரடி பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் முத்தையாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி தீவிர விசாரணை செய்த பின்னரே அனுமதித்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com