நாமக்கல்லில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கலெக்டர் ஆசியா மரியம் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கலெக்டர் ஆசியா மரியம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நாமக்கல்லில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கலெக்டர் ஆசியா மரியம் பங்கேற்பு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சாரண, சாரணியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கலெக்டர் ஆசியா மரியம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து 40 மரக்கன்றுகள் அங்கு நடப்பட்டன. அப்போது கலெக்டர் சாரண, சாரணியர்களிடம் காற்று மாசுபாட்டை குறைக்கும் வழிமுறைகளையும், மரம் நட்டு வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்து கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ், உதயகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் யோகலட்சுமி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் மற்றும் பாரத சாரண, சாரணிய இயக்க மாவட்ட செயலாளர் விஜய் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com