ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.7ஆயிரத்து 500 வழங்க வேண்டும், தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலையரசன், குருவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் வான்தமிழ்இளம்பரிதி, அய்யாத்துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முருகபூபதி, தாலுகா நிர்வாகி களஞ்சியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட பொருளாளர் ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையிலும், எமனேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராதா, கமுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட தலைவர் முத்துவிஜயன், அபிராமத்தில் தாலுகா செயலாளர் முனியசாமி, மண்டபத்தில் கிளை செயலாளர் கல்யானசுந்தரம், திருப்புல்லாணியில் ஒன்றிய செயலாளர் சேகர், பெரியபட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்டு கிளை செயலாளர் சொக்கலிங்கம், சாயல்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் முத்துசாமி, உத்தரகோசமங்கையில் ஒன்றிய குழு உறுப்பினர் முருகேசன், சிக்கல் பகுதியில் தாலுகா செயலாளர் பச்சம்மாள், திருவாடானையில் தாலுகா செயலாளர் சேதுராமு, முதுகுளத்தூரில் தாலுகா செயலாளர் முத்துவேல், தேரிருவேலியில் ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டங்களில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com