சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ‘கிங்’ ஆக இருக்கும் - நயினார் நாகேந்திரன் பேட்டி

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ‘கிங்’ ஆக இருக்கும், பாரதீய ஜனதா கட்சியின் கன்னியாகுமரி மண்டல பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ‘கிங்’ ஆக இருக்கும் - நயினார் நாகேந்திரன் பேட்டி
Published on

நெல்லை,

பாரதீய ஜனதா கட்சியின் கன்னியாகுமரி மண்டல பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் சென்னையில் இருந்து நெல்லை வந்தார். அவருக்கு நெல்லை மாவட்ட எல்கையான கங்கைகொண்டானில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பாரதீய ஜனதாவில் ஆளுமை மிக்க தலைமையில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ எந்த அர்த்தத்தில் கூறினார் என தெரியவில்லை. எந்த கட்சியாக இருந்தாலும் புதிதாக தலைமைக்கு வருபவர்களின் திறமை, செயல்பாடுகள் மூலம் ஆளுமை வெளிப்படும். மோடி பிரதமரானதும் அவரது ஆளுமை உலகிற்கு தெரிய வந்தது. வரும் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கிங் ஆக இருக்கும். தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றியை பெற்று ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ள நிலையில், தேர்தல் அறிவித்த பின்னரே எந்த கட்சிகள், எந்த கூட்டணியில் இடம் பெறும் என தெரிய வரும்.

மத்திய அரசு தமிழகத்திற்கு சரக்கு சேவை வரி பங்களிப்பு ரூ.24 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. இதுதவிர தமிழகத்தில் சாலை உள்பட பல்வேறு கட்டமைப்புகளுக்கு தொடர்ந்து மத்திய அரசு பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட தலைவர் மகாராஜன், பொதுச்செயலாளர் தமிழ் செல்வன், கணேசமூர்த்தி, முத்துக்குமார், மாவட்ட துணை தலைவர் சுரேஷ், மத்திய அரசு வக்கீல் பாலாஜி கிருஷ்ணசாமி, ஐ.டி. பிரிவு மாவட்ட தலைவர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பார்வையாளர் தயா சங்கர், நெல்லை மாவட்ட பார்வையாளர் பாலாஜி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com