வணிக வளாகத்தில் 3 காய்கறி கடைகளின் மேற்கூரை இடிந்து விழுந்தது பலத்த மழை எதிரொலி

ஆரணி பகுதியில் பெய்த பலத்த மழையால், நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள 3 காய்கறி கடைகளின் மேற்கூரை இடிந்து விழுந்தன. ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை.
வணிக வளாகத்தில் 3 காய்கறி கடைகளின் மேற்கூரை இடிந்து விழுந்தது பலத்த மழை எதிரொலி
Published on

கண்ணமங்கலம்,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதிய பஸ் நிலையம் அருகில் நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. அந்த வணிக வளாகம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். அதில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் நகராட்சி மூலம் குத்தகைக்கு விட்டு வாடகை வசூலிக்கப்படுகின்றன.

அங்குள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே பல இடங்களில் கடைகள் சேதம் அடைந்திருந்தன. சேதம் அடைந்த கடைகளைச் சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும், நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆரணி பகுதியில் பெய்த பலத்த மழையால், அதிகாலை நேரத்தில் மார்க்கெட்டில் உள்ள 3 காய்கறி கடைகளின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தன. நேற்று மார்க்கெட் விடுமுறை என்பதால், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. ஆகையால், உயிர்சேதம் ஏற்படவில்லை.

கோரிக்கை

30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வணிக வளாகத்தை இடித்து விட்டு, அங்குப் புதிதாக வணிக வளாகம் கட்டித்தர வேண்டும். புதிய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து, அனைத்துப் பஸ்களும் வந்து செல்ல வசதி ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். தற்போதுள்ள பழைய பஸ் நிலையத்தில் புதிதாக வணிக வளாகம் கட்ட ஆரணி நகராட்சி நிர்வாகம், ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com