டேக்வாண்டோ போட்டியில், தங்கம் வென்று மாணவர் சாதனை

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில் ராமநாதபுரம் பள்ளி மாணவர் அபினேஷ் சர்மா தங்கம் வென்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
டேக்வாண்டோ போட்டியில், தங்கம் வென்று மாணவர் சாதனை
Published on

ராமநாதபுரம்,

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் 2018-19 கல்வியாண்டிற்கான மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் ராமநாதபுரம் நேசனல் அகாடமி பள்ளியில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளை பள்ளி தாளாளர் டாக்டர் செய்யதா அப்துல்லா, பள்ளி முதல்வர் ராஜமுத்து ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டிகளை சர்வதேச நடுவர் ராமலிங்க பாரதி, தேசிய நடுவர் பாஸ்கரன், கன்னியாகுமரி மாவட்ட நடுவர் சங்கர்குமார், ராமநாதபுரம் மாவட்ட நடுவர் கர்ணன், ரமேஷ்பாபு, ராஜா, ரமேஷ், முகமது உசேன் ஆகியோர் நடத்தினர்.

இதில் 19 வயதிற்கு உட்பட்ட 45 கிலோ எடைப்பிரிவு போட்டியில் ராமநாதபுரம் நேசனல் அகாடமி பள்ளி மாணவர் அபினேஷ்சர்மா முதலிடம் பிடித்து தங்கம் வென்றதோடு மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றார்.

மண்டல அளவிலான போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு வருகிற 4,5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் திருப்பூரில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில் முதல்முறையாக மதிப்பெண்களை துல்லியமாக கணக்கிட்டு அறிவிக்கும் எலக்ட்ரானிக் ஸ்கோர் சிஸ்டம் கருவி பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உசேன், உடற்கல்வி இயக்குனர் அன்சாரி ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தங்கம் வென்று சாதனை படைத்ததோடு மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர் அபினேஷ்சர்மாவை தாளாளர் டாக்டர் செய்யதா அப்துல்லா, பள்ளி முதல்வர் ராஜமுத்து மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com