உப்பிடமங்கலத்தில் சந்தனத்துறை ஆற்று வாரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்

உப்பிடமங்கலத்தில் உள்ள சந்தனத்துறை ஆற்று வாரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உப்பிடமங்கலத்தில் சந்தனத்துறை ஆற்று வாரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்
Published on

உப்பிடமங்கலம்,

உப்பிடமங்கலம் பேரூராட்சி மண்டல செயற்குழு கூட்டம் உப்பிடமங்கலம் தெற்கு கேட் பகுதியில் உள்ள வாஜ்பாய் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உப்பிடமங்கலம் பேரூராட்சி மண்டல தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி தலைவர் அருணாசலம், மாவட்ட துணைத்தலைவர் புஷ்பலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உப்பிடமங்கலம் பேரூராட்சி மண்டல செயலாளர் செல்லதுரை வரவேற்றார்.

மாவட்ட தலைவர் முருகானந்தம், மாவட்ட பொது செயலாளர்கள் கைலாசம், நகுலன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் தங்கவேல், குளித்தலை ஒன்றிய பொது செயலாளர் சிவகுமார், பிரசார குழு மாவட்ட தலைவர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் உப்பிடமங்கலத்தில் உள்ள சந்தனத்துறை ஆற்று வாரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார வேண்டும்.

உப்பிடமங்கலம் ஏரிக்கரை மிக மோசமாக உள்ளதால் மழை காலங்களுக்கு முன்பு கரையை சீரமைக்க வேண்டும். உப்பிடமங்கலம்- சேங்கல் சாலை, ஜோதிவடம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தார்ச்சாலையை புதுப்பிக்க வேண்டும். இதேபோல் புதுகஞ்சனூர் வழியாக கருவாட்டியூர் செல்லும் தார்ச்சாலையையும் புதுப்பிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நவின்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தாந்தோணி ஒன்றிய நிர்வாகிகள், உப்பிடமங்கலம் பேரூராட்சி மண்டல நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தாந்தோணி மண்டல தலைவர் முத்துசாமி நன்றி கூறினார். தொடர்ந்து உப்பிடமங்கலத்தில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com