திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

திருப்பூர்,

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதம் தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதந்தோறும் ரூ.200-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600-ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750-ம், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000-மும் வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. மனுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு முடிந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்கவும் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான சான்று தேவையில்லை.

மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரி படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் குடியிருந்து வருபவராகவும், முற்றிலும் வேலையில்லாதவராகவும் இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ, மாணவிகளாக இருக்க கூடாது. ஆனால் தொலை தூர கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுபித்து 5 வருடங்கள் வேலையில்லாமல் காத்திருப்பவர் www.tnv-e-l-a-iv-a-a-i-ppu.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்விற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கும் தேர்வு மையங்களுக்கு சென்று வருவதற்காகவும், இந்த தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் உடனடியாக திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பப்படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com