திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேருவிற்கு, தமிழ்நாடு முற்போக்கு ஓட்டுநர் சங்கத்தினர் ஆதரவு

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரும், முதன்மை செயலாளருமான கே.என்.நேரு இனாம்தார் தோப்பு உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு முற்போக்கு ஓட்டுநர் சங்கத்தினர் தங்கள் ஆதரவை கே.என்.நேருவிடம் தெரிவித்த போது
தமிழ்நாடு முற்போக்கு ஓட்டுநர் சங்கத்தினர் தங்கள் ஆதரவை கே.என்.நேருவிடம் தெரிவித்த போது
Published on

இதையொட்டி அந்த பகுதிகளில் பலூன்களால் அலங்கரிக் கப்பட்ட வளைவுகள், தி.மு.க. கொடி, தோரணங்கள் மற்றும் கூட்டணி கட்சி கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கே.என்.நேருவுக்கு பிர மாண்ட வரவேற்பு அளித்து ஆளுயுர மாலை அணிவித்து பொதுமக்கள் வரவேற்றனர்.

வாக்கு சேகரிப்பின் போது கே.என்.நேரு பேசியதாவது:-

சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பிரசாரத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் காஜாமலை விஜி, சுரஷ், எம்.ஆர்.எஸ்.குமார் இளையராஜா, நாகராஜன், ராஜ்குமார் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கழக முதன்மை செயலாளரும், மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான கே.என்.நேருவை, தமிழ்நாடு முற் போக்கு ஓட்டுநர் சங்கத் தினர் நேரில் சந்தித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வையும், அதன் கூட்டணி கட்சிகளையும் முற்போக்கு ஓட்டுநர் சங்கத் தின் சார்பாக ஆதரிப்பதாக தெரிவித்தனர். அப்போது மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்

க.வைரமணி உடன் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com