உத்தமபாளையத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி: வாய்க்கால்களை மூடுவதால் வயல்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் விவசாயிகள் எதிர்ப்பு

உத்தமபாளையத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியையொட்டி வயல்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் மூடப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
உத்தமபாளையத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி: வாய்க்கால்களை மூடுவதால் வயல்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் விவசாயிகள் எதிர்ப்பு
Published on

உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தில் இருந்து அனுமந்தன்பட்டி செல்லும் சாலைவரை வயல் களை அழித்து 4 வழிச்சாலை அமைக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இதில் பாலங்கள் கட்டுவதற்கு வயல்கள் தோண்டப்படுகின்றன. இதற்காக சாலையின் இரண்டு புறமும் வயல்களில் சுமார் 10 அடி பள்ளம் தோண்டப்படுகிறது. இந்த பகுதியில் வயல்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய 13 வாய்க்கால்கள் உள்ளன.

இந்தநிலையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி காரணமாக வயல்களுக்கு தண்ணீர் செல்லும் சில வாய்க் கால்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் தெற்கு பகுதியில் உள்ள விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பல நூற்றாண்டு காலமாக உள்ள வாய்க்கால்களை மூடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாய்க்கால்களை மூடி வயல்களுக்கு தண்ணீரே செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளனர். இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும். காலம் காலமாக இருக் கக்கூடிய வாய்க் கால்களை மூடக்கூடாது. சாலை அமைக் கும் போது இரண்டுபுறமும் 10 அடி பள்ளம் தோண்டக் கூடாது இதனால் விவசாயத்திற்கு தண்ணீரே செல்ல முடியாத நிலை உருவாகும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வாய்க்கால்கள் மூடப்பட்டதால் கடந்த 1 வாரத்திற்கு முன்பு தண்ணீர் திறந்தும், தெற்கு பகுதியில் உள்ள சுமார் 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறாமல் உள்ளது. தண்ணீர் கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ள நிலையில் திறக் கப்பட்ட தண்ணீரும், வயல் களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து தெற்குபகுதி விவசாயிகள் சங்க தலைவர் முகமதுராவுத்தர் கூறியதாவது:-

4 வழிச்சாலை திட்டத்திற் காக விவசாய நிலங்களில் சாலைகள் அமைக்கின்றனர். இதில் வயல்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய வாய்க்கால்கள் மூடப்பட்டு வருகிறது. இதனால் தெற்கு பகுதியில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மூடப்பட்ட வாய்க் கால்களை திறக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com