

ராதாபுரம்,
ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக இன்பதுரை எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கொளுத்தும் வெயிலில் வீதி வீதியாக நடந்து சென்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
நேற்று வேட்பாளர் இன்பதுரை வள்ளியூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மச்சி கோவில், தெற்கு வள்ளியூர், கீக்குளம், மகிழ்ச்சிபுரம், துரைகுடியிருப்பு, செம்பாடு, பாம்பன்குளம், கிருஷ்ணாபுரம், சைதம்மாள்தபுரம், புஷ்பவனம் மற்றும் பணகுடி பேரூராட்சிக்குட்பட்ட நெருஞ்சி காலனி, புண்ணியவாளன்புரம், சிவகாமிபுரம், தெற்கு சிவகாமிபுரம், வடக்கு, சிவலிங்க நாடார் காம்பவுண்டு, தேர்கெபி, அழகிய நம்பிபுரம், சூசையப்பர் கோவில் தெரு, மேரி பாத்திமா தெரு, கவிமணி தெரு, சந்தை, மாரியம்மன் கோவில் தெரு, லூர்து மாதா கோவில் தெரு, திருஇருதய பள்ளி தெரு, சர்வோதயா, மங்கம்மாள் சாலை, சர்வோதயா காலனி, பிள்ளையார் கோவில் தெரு, பாஸ்கராபுரம், மந்தையடிசாமி கோவில், விஏஒ ஆபிஸ், வண்டி மறித்தான் கோவில் தெரு, பஸ் நிலையம் மேற்கு மேல ரதவீதி, பிள்ளையார் கோவில் தெரு, அண்ணாநகர், கோவில்விளை, கூலக்கடை பஜார், பத்திரகாளியம்மன் கடை, சத்தியாநகர், கலந்தபனை, ரோஸ்மியாபுரம், காவல்கிணறு சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதேபோன்று பணகுடியில் ஆட்டோ டிரைவர்களிடம் கடந்த 5 ஆண்டுகளாக ராதாபுரம் தொகுதியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து இன்பதுரை பேசுகையில், ராதாபுரம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்டு முழுவதும் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் வர புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை தொகுதிக்கு கொண்டுவர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
பிரசாரத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே. சீனிவாசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நாராயண பெருமாள், ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளர் மைக்கேல் ராயப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை, ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம், அந்தோணி அமல ராஜா, வள்ளியூர் செல்வராஜ், நிர்வாகிகள் ஜி.டி.லாரன்ஸ், ஜேகன், செழியன், கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.