இனாம்குளத்தூர் குளத்தை தூர்வார நடவடிக்கை அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்காளர்களிடம் உறுதி

இனாம்குளத்தூர் குளத்தை தூர்வார நடவடிக்கை என்று அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்காளர்களிடம் உறுதி அளித்தார்.
இனாம்குளத்தூர் குளத்தை தூர்வார நடவடிக்கை அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்காளர்களிடம் உறுதி
Published on

ஜீயபுரம்,

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் கு ப கிருஷ்ணன் நேற்று மணிகண்டம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, அவர் பேசும்போது,

தி.மு.க.வினரை போல் ஆற்று மணலை கொள்ளையடித்தோ, அடி மனை அபகரித்தோ, கட்டப்பஞ்சாயத்து செய்தோ வருவாயைப் பெருக்கிக் கொள்ள வில்லை. நான் வெற்றி பெற்றதும் இனாம்குளத்தூரில் உள்ள குளத்தை தூர்வாரி நீர் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அம்மாபேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி மக்களுக்கு தனியார் நிறுவனங்களிடம் கலந்தாலோசித்து பெண்களுக்கான வேலை வாய்ப்பு கிடைத்திட தொழிற்சாலை நிறுவப்படும் என்றார்.

மாத்தூருக்கு சென்றபோது, வயலில் தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களிடம் கு ப கிருஷ்ணன் வாக்குசேகரித்தார். அப்போது, மணிகண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன், சந்திரசேகர், பெரியசாமி, மனோகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தமிழழகன், ஒன்றிய கவுன்சிலர் நல்லுசாமி, பா.ஜனதா கட்சியின் ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com