தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை

பெரம்பலூர் மாவட்ட வீராங்கனைகளான நாகப்பிரியா, ராஜமாணிக்கம் ஆகியோரை கலெக்டர் சாந்தா பாராட்டி ஊக்கத்தொகையினை வழங்கினார்.
தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை
Published on

பெரம்பலூர்,

கடந்த 2017-18-ம் ஆண்டில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் பெற்ற பெரம்பலூர் மாவட்ட வீராங்கனைகளான நாகப்பிரியா, ராஜமாணிக்கம் ஆகியோரை கலெக்டர் சாந்தா பாராட்டி ஊக்கத்தொகையினை வழங்கினார். இதில் நாகப்பிரியா குண்டூரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்றதற்காக, ரூ.4 ஆயிரமும், இதே போல் இந்திய பள்ளிக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட டேக்வோண்டோ போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் ராஜமாணிக்கம் வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை புரிந்ததற்காக ரூ.5 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராம சுப்பிரமணியராஜா உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com