நெல்லை பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

நெல்லையில் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.
நெல்லை பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
Published on

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நீராதாரமாக திகழ்ந்து வரும் தாமிரபரணி நதியின் மூலம் பயன்பெறும் பாசன குளங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கும் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடந்துவருகிறது. அகத்திய மலை சமூகம் சார்ந்த சூழலியல் அமைப்பு மற்றும் நெல்லை, தூத்துக்குடி நேச்சர் கிளப் அமைப்பு சார்பில் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன குளங்களில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் கல்லூரி மாணவ-மாணவிகள் என 200 பேர் பங்கேற்று உள்ளனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து பறவைகளை இனம் மற்றும் ரகம் வாரியாக அவைகளை நேரில் காண்பது, அவற்றின் எச்சம், கால்தடம், கூடுகள், ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுத்து வருகின்றனர்.

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வேய்ந்தான்குளத்தில் தற்போது பெய்த கனமழையால் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த குளத்திற்கு எந்த வருடமும் இல்லாத வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து வருகிறது. இங்கு பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு பறவைகள் தொலைநோக்கி உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் கண்டு கணக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கங்கைகொண்டான் பெரிய குளம், ராஜவல்லிபுரம் குளம், நயினார்குளம் உள்ளிட்ட குளங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் தொடர்ந்து நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com