பெட்ரோல்- டீசல் வாங்குவதற்கு வங்கியில் கடன் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்

பெட்ரோல்- டீசல் வாங்குவதற்கு வங்கியில் கடன் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்.
பெட்ரோல்- டீசல் வாங்குவதற்கு வங்கியில் கடன் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
Published on

சென்னை,

தமிழகத்தில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. குறிப்பாக பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்தும், அவற்றின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் மத்தியசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில் புரசைவாக்கம் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு, பெட்ரோல்-டீசல் வாங்குவதற்கு கடன் கேட்டு வங்கியில் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நூதன போராட்டத்தை தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா தொடங்கி வைத்தார். இந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் வசந்தராஜ், மாநில செயலாளர்கள் அயன்புரம் சரவணன், சுரேஷ்பாபு, கலை பிரிவு செயலாளர் சூளை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com