

அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அனைத்தையும் பொது மக்களுக்கு தவறாமல் கொண்டு வந்து சேர்ப்பேன். செய்வதை மட்டுமே சொல்வதுதான் தி.மு.க. கொரோனா காலகட்டத்தில் பொது மக்களுக்கு ஓடி வந்து உதவி செய்தது தி.மு.க மட்டுமே. ஓவ்வொரு பகுதியிலும். தி.மு.க.வினர் பொது மக்களை தேடிச்சென்று உதவி செய்தனர். தி.மு.க தலைவர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.ஆனால் எடப்பாடி ரூ.1000 மட்டுமே வழங்கினார். தற்போது வாக்குறுதிகளை அள்ளிவீசுகிறார்.. இது மட்டும் எப்படி சாத்தியம்? சிந்தித்து பாருங்கள் பொது மக்களே அ.தி.மு.க வினர் கூறுவது அனைத்துமே
வெற்று அறிவிப்புகள்தான்.
தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து செயல் திட்டங்களும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அமுல்படுத்தப்படும். நமது தொகுதி மக்களுக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும், நமது வருங்கால முதல்வரான ஸ்டாலினிடம் பெற்று தருவேன். ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை செயல்படுத்தவும். நாடு வளம் பெறவும் ,மக்கள் பஞ்சம் பசி பட்டினி இன்றி செழிப்பான வாழ்க்கை வாழவும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து நமது தளபதி அவர்களை அரியணையில் ஏற்றி வெற்றி விழா எடுப்பதே நமது நோக்கம். உங்கள் வீட்டுப்பிள்ளை ஆகிய என்னை கிணத்துக்கடவு தொகுதியில் வெற்றி பெறச்செய்து, காலம் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.