பழங்குடியினர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

சேலம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
பழங்குடியினர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
Published on

சேலம்,

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பழங்குடியினர் நல பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகளில் 2019-2020-ம் கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

பழங்குடியினர் விடுதிகளில் தங்கி அருகிலுள்ள பள்ளிகளில் படிக்க விருப்பமுள்ள மாணவ, மாணவிகளுக்கு அரசால் சீருடை, உணவு, மற்றும் சுகாதாரமான வசதிகள் செய்து தரப்படுகிறது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் இதர வகுப்பினர் என பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறும்.

விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மேலும் விடுதிக்கு 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளை விடுதியில் சேர்க்கலாம்.

விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர்களை அணுகி இலவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் விடுதி காப்பாளர்களிடம் வருகிற 20-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com