கார்த்திகை தீப திருநாளையொட்டி கல்லல், சிங்கம்புணரி பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம்

கார்த்திகை தீப திருநாளையொட்டி கல்லல் மற்றும் சிங்கம்புணரி பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
கார்த்திகை தீப திருநாளையொட்டி கல்லல், சிங்கம்புணரி பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம்
Published on

கல்லல்,

காரைக்குடி அருகே கல்லலில் கார்த்திகை தீப திருநாளையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கல்லல் இந்திராநகர்மதகுபட்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 33 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை விராமதி சந்திரன் வண்டியும், 2வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும், 3வது பரிசை கீழவளவு சக்தி வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 20 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை அரண்மனை சிறுவயல் சேக்அப்துல்லா வண்டியும், 2வது பரிசை, காரைக்குடி கருப்பணன் வண்டியும், 3வது பரிசை கோட்டணத்தம்பட்டி மயில்கண்ணன் வண்டியும் பெற்றன.

வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டக. இதேபோல் கார்த்திகை தீப திருநாளையொட்டி சிங்கம்புணரியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சிங்கம்புணரிமேலூர் சாலையில் நடைபெற்ற இந்த வண்டி பந்தயத்தில் மொத்தம் 12 வண்டிகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை சிங்கம்புணரி பழனிச்சாமி வண்டியும், 2வது பரிசை பாண்டாகுடி முருகேசன் வண்டியும், 3வது பரிசை சிங்கம்புணரி இளங்கோ வண்டியும், 4வது பரிசை காளாப்பூர் பிரேம்குமார் வண்டியும் பெற்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com